பக்கம் எண் :

302 திருமுறைத்தலங்கள்


                                             -பீடுகொண்டு
      மன்னியூரெல்லாம் வணங்க வளங்கொண்ட
      வன்னியூர் மேவும் அதிபதியே.      (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
     பொன்னூர் - பாண்டூர் அஞ்சல் - 609 203
     (வழி) நீடூர் - மயிலாடுதுறை வட்டம்
      நாகப்பட்டினம் மாவட்டம்.

77/23. திருவேள்விக்குடி

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     குத்தாலத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - மகாராஜபுரம்
சாலையில் உள்ளது. சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின்
இப்பெயர் பெற்றது. இறைவிக்குக் கங்கண தாரணம் செய்தபடியால் இதற்குக்
“கௌதுகாபந்தன க்ஷேத்திரம்” என்று பெயர். நீண்டநாள் திருமணம்
ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம்
நடைபெறும் என்பது இத்தலச் சிறப்பு. மணவாளேஸ்வர சுவாமி திருமணக்
கோலத்துடன் திகழ்கிறார்.

     இறைவன் - கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்,
                மணவாளேஸ்வரர்
     இறைவி - பரிமளசுகந்த நாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி.
     தீர்த்தம் - கௌதகாபந்தன தீர்த்தம்.

     சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். இத்தலம்
திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பட்டுள்ளது. அரசகுமாரன் ஒருவனுக்கு
மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள்
பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன்
இறைவனை நோக்கித் தவஞ் செய்து