இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது) - கோயிலின் பக்கத்தில் உள்ளது. சம்பந்தரும் அப்பரும் பாடப்பெற்றது. ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாய்க்கரால் கட்டப்பட்ட தென்பர். இன்று ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உட்புகுந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள். அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. மிகச்சிறிய திருமேனி-சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலம். நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் நால்வர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் சந்நிதிகள். கோஷ்டத்தில் பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் மூர்த்தங்கள் உள்ளன. காரண ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாடொறும் ஐந்து கால வழிபாடுகள். சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் சுவாமிக்குக் கல்யாண உற்சவம் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. “மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம் பழியாமைப் பண்ணிசையான் பகர்வானை வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி இழியாமை ஏத்தவல்லார்க்(கு) எய்தும் இன்பமே.” (சம்பந்தர்) “துன்னுவார் குழலாள் உமையா ளொடும் பின்னுவார்சடை மேற்பிறை வைத்தவர் மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை உன்னுவார் வினையாயின் ஓயுமே.” (அப்பர்)
-நண்ணு வணஞ் சேரிறைவன் மகிழ்ந்து வணங்கும் மணஞ்சேரி நீங்கா மகிழ்வே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அருள்வள்ளல்நாத சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி & அஞ்சல் - 609 813 குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம். |