ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. உள்பிராகார வலம் முடித்துப் படிகளேறி, மண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்பால் நவக்கிரக சந்நிதி. வாயிலைக் கடந்து உள்சென்றால் இடப்பால் நடராசசபை உள்ளது. எதிரில் வாயில் உள்ளது. இச் சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள. இச் சபை, ‘சம்பு விநோத சபை’, ‘காமனங்கநாசனி சபை’ எனப் பெயர் பெறும். துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம், மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. நிறைவான தரிசனம். நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. பெருவிழாக்களும் மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. “நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ்செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தண னாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த கூற்றினைக் குமைப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.” ‘நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் கறை நிறத்தெலிதன் மூக்குச் சுட்டுடக்கனன்று தூண்ட நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவானு லகுமெல்லாம் குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.’ (அப்பர்) - மணஞ்சேர்ந்து வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை வீரட்டமேவும் வியனிறைவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கொருக்கை நீடூர் அஞ்சல் - (வழி) நீடூர் மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் 609 203. |