81/27. திருக்கருப் பறியலூர் மேலைக்காழி, தலைஞாயிறு. | சோழநாட்டு (வடகரை)த் தலம்.
மக்கள் வழக்கில் ‘தலைஞாயிறு’ என்றும், கொச்சையாக ‘தலைஞாயர்’ என்றும் வழங்குகிறது. இஃது கொகுடிக்கோயில். கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில். ஊர் - கருப்பறியலூர். கோயில் - கொகுடிக்கோயில். கருமூலத்தை அழித்து ஞானம் நல்கும் தலமாதலின் ‘கருப்பறியலூர்’ என்று பெயர் பெற்றது. கன்மநாசபுரி என்றும் பெயருண்டு. சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றாயிற்று. சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு ஆதித்யபுரி என்றும் பெயராயிற்று. முல்லை ; தலமரமாதலின் முல்லை வனம் - யூதிகாவனம் என்றும் பெயர். கோயில் கட்டுமலைமேல் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், ‘தலைஞாயிறு’ என்று கைகாட்டி உள்ள இடத்தில், பிரியும் சாலையில் (வலப்புறமாகச்) சென்றால் தலத்தையடையலாம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவு.
இறைவன் - அபராத க்ஷமேஸ்வரர், குற்றம் பொறுத்த நாதர் இறைவி - விசித்ர பாலாம்பிகா, கோல்வளைநாயகி தலமரம் - கொகுடிமுல்லை தீர்த்தம் - இந்திர தீர்த்தம்.
தருமையாதீனத் திருக்கோயில், வசிட்டர், ஆஞ்சநேயர், இந்திரன் ஆகியோர் வழிபட்டது. சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத் தருள் செய்தமையால் குற்றம்பொறுத்த நாதராயினார் என்பது வரலாறு. ராஜகோபுரம் மூன்றுநிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்பினது. பிராகாரத்தில் சீகாழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும்மேலே சென்று சட்டை நாதரைத் தரிசிக்க வேண்டும். தோணியப்பர் கையில் மான்மழு உளது. சுவாமி அம்பாள் மட்டும் உள்ளனர். சட்டை நாதரைத் தரிசிக்கச் |