“சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார் ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார் தோகைமாமயிலனைய துடியிடை பாகமும் உடையார் வாகைநுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர்உளாரே.” (சம்பந்தர்) ‘மெய்யனை மெய்யினின்றுணர்வானை மெய்யிலாதவர் தங்களுக்கெல்லாம் பொய்யானைப் புரமூன்றெரித்தானைப் புனிதனைப் புலித்தோல் உடையானைச் செய்யனை வெளியதிருநீற்றிற் றிகழுமேனியன் மான்மறியேந்தும் மை கொள்கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்தென்னினைக் கேனே.” (சுந்தரர்) ‘சீர்பூத்த நறுங்கமல மேலவனும் மாலவனும் செம்பொனாய ஊர்பூத்த சுதன்ம சபையானும் ஒளியீனும் முடிஉம்பராரும் நார்பூத்த புவியாரும் குவியாரும் வந்திறைஞ்சி நாளும்நல்கி ஏர்பூத்த வாளொளி புற்றூரமர் மாணிக்க லிங்கம் இருதாள்போற்றி.’ (தலபுராணம்) -தாவுமயல் தாழ்கொள் இருமனத்துக் காரிருணீத் தோர்மருவும் வாழ்கொளி புத்தூர் மணிச் சுடரே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் - அஞ்சல் - 609 205 மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |