பக்கம் எண் :

328 திருமுறைத்தலங்கள்


யாகசாலையும் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் நவக்கிரகங்களை சனி
பகவான், பைரவர், சூரியன் திருவுருவங்கள் ஒரே வரிசையில் வைக்கப்
பட்டுள்ளன.

     வலம்முடித்து மண்டபத்துள் நுழைந்தால் வலப்பால் நடராசசபை
உளது. இடப்பால் நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள திருநாரையூர்
இரட்டைமணிமாலைப் பாடல்களும் தேவாரப் பதிகங்களும் பதிக்கப்
பட்டுள்ளன. துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் உற்சவத்
திருமேனிகள் பாதுகாத்து வைத்திருத்தலைக் காணலாம். இவற்றுள் நாரை,
பொல்லாப்பிள்ளையார், இராசராசன், சந்திரசேகர், நால்வர் முதலியன
தரிசிக்கத்தக்கன. கோஷ்டமூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும்
தனிச்சந்நிதிகளாக ஆக்கப்பட்டு வழிபடப் பெறுகின்றன. நேரே மூலவர்
தரிசனம். சௌந்தரநாதர் சௌந்தர்யமாகவே காட்சி தருகிறார். அழகான
சிவலிங்கத் திருமேனி.

     கோயிலுக்கு எதிரில், நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த இல்லம்
அவர் பெயரில் நினைவாலயமாக (14-9-84ல்) ஆக்கப்பட்டுள்ளது. முன்
புறத்தில் வளைவு உள்ளது. நம்பியாண்டார் நம்பிகள், விதானத்தின் கீழ்,
நின்ற திருக்கோலத்தில் கையில் அபிஷேகக் கலசத்துடன் காட்சி தருகின்றார்.
இதன் பின்னிடம் நந்தவனமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. நம்பியாண்டார்
நம்பியின் பெற்றோர் - அநந்தேச சிவாசாரியார், கல்யாணி என்றும்;
எருக்கத்தம்புலியூரில் யாழ்ப்பாணர் மரபில் வந்த “ஏந்திசைப்பாடினி”
என்றும் ஊமைப்பெண், பொல்லாப்பிள்ளையாரின் அருளால் பேசும் திறமை
பெற்றாள் என்றும், அவரே பாடல்களுக்குப் பண் அமைத்துத் தந்தார்
என்றும் சொல்லப்படுகிறது. நம்பியாண்டார் நம்பிகள் குரு பூசை ஆண்டு
தோறும் புனர்பூச நாளில் கொண்டாடப்படுகிறது. இதற்கென வைப்பு நிதி
ஒரு லட்சம் வைக்கப்பட்டுள்ளது. நித்திய வழிபாட்டுக் கட்டளையும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

     ‘பகர் மார்க்கண்டர் திருநாரை பாண்டவாதிபலர் முன்னாள்
     அகமார் அன்பால் விதியுளியே அருச்சித்திறைஞ்ச அவ்வவர்க்குத்
     தகமாக் கருணை புரிந்தருளித் தமியேம் பிறவி நீங்க நலம்
     மிகமா வளஞ்சேர் திருநாரையூர் வாழ் விமலன் தாள்பணிவாம்.’

     ‘பொருநாகப் பணியுடனே குழவிப் பிறையுஞ்
          சடைமிசையே யணியும் பெருமான்
     இருநாழித் தருமருநென் முதலா
          எண்ணான் கறமும் பெருகப் புரிவாள்