பக்கம் எண் :

330 திருமுறைத்தலங்கள்


     ‘பண்ணி னான்மறை பாடலோ டாடலும்
      எண்ணிலார் புரமூன் றெரிசெய்ததும்
      நண்ணினார் துயர் தீர்த்தலு நாரையூர்
     அண்ணலார் செய்கை அம்ம அழகிதே.’     (அப்பர்)

                                   -மேனாட்டுந்
     தேரையூர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்றிலங்கும்
     நாரையூர் மேவு நடுநிலையே.            (அருட்பா)

     “மருப்பை யொரு கைக்கொண்டு காரையூர் மன்னும்
      பொருப்பை யடிபோற்றத்துணிந்தால் - நெருப்பை
      அருந்த வெண்ணுகின்ற எறும்பன்றே யவரை
      வருத்த வெண்ணுகின்ற மலம்.”

அஞ்சல் முகவரி ;-

    அ/மி. சௌந்தரநாதசுவாமி திருக்கோயில்
     (சுயம்பிரகாசநாதசுவாமி தேவஸ்தானம்)
     திருநாரையூர் & அஞ்சல் - 608 303
     (வழி) லால்பேட்டை - காட்டுமன்னார்கோயில் வட்டம்
     கடலூர் மாவட்டம்.


 

88/34. திருக்கடம்பூர்

மேலைக்கடம்பூர், மேலக்கடம்பூர்.

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் பேச்சு வழக்கில் மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது. கருவறை
அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் (சக்கரங்களுடன்)
உள்ள திருக்கோயில்- கரக்கோயில். ‘கடம்பு’ தலமரமாதலின் கடம்பூர்
ஆயிற்று.

     (1) சிதம்பரம் - எய்யலூர் (வழி) காட்டுமன்னார்குடி பேருந்தில் சென்று
இத்தலத்தையடையலாம்.