பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 331


     (2) காட்டுமன்னார்குடி- எய்யலூர் சாலையில் வந்து ஊரையடையலாம்.
மெயின் ரோடில் முதலில் கீழ்க்கடம்பூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ளது.
அதன்பிறகே மேலைக்கடம்பூர் உள்ளது.

    (3) ஓமமாம்புலியூர் வழிபட்டு அங்கிருந்து சுருக்கமான வழி மூலம்
கடம்பூர் வரவிரும்புவோர், ஓமாம்புலியூர் - காட்டுமன்னார்குடி சாலையில்
உள்ள மோவூர் வந்து, அங்கிருந்து ஆயங்குடி சாலையில் சென்று, ஆயங்குடி
தாண்டி, எய்யலூர் - காட்டுமன்னார்குடி மெயின் ரோடில் வந்து கலந்து,
காட்டுமன்னார்குடி பக்கமாகத் திரும்பிச் சென்றால் மேலக்கடம்பூரை
அடையலாம். இது பேருந்து செல்லச் சற்று சிரமமான பாதை - Single Road,
வேன், காரில் செல்வோர் சுலபமாகச் செல்லலாம். மழைக்காலத்தில்
செல்வதற்கு ஏற்றதன்று.

    ‘தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்பணி செய்து கிடப்பதே
என்கடன்’ என்று பாடிய அப்பர் வாக்குக்குரிய தலம். (ஊர் கீழைக்கடம்பூர்,
மேலைக்கடம்பூர் என இரு பிரிவாகவுள்ளது. கீழைக் கடம்பூரில் உள்ளது
‘கடம்பூர் இளங்கோயில்’ என்னும் (அப்பர்) வைப்புத்தலமாகும். இக்கோயில்
கிலமாகியுள்ளது. பாடல் பெற்ற கோயில் மேலைக்கடம்பூரில் உள்ளது.)

     இந்திரன் வழிபட்டு அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற
சிறப்புத்தலம். அங்காரகன் வழிபட்டதலமாதலின் இத்தோஷமுடையார் வழிபட
அது நீங்கும்.

     இறைவன் - அமிர்தகடேஸ்வரர்
     இறைவி - வித்யுஜோதி நாயகி, சோதிமின்னம்மை.
     தலமரம் - கடம்பு
     தீர்த்தம் - சக்தி தீர்த்தம் (கோயிலுக்குச் சற்று தூரத்தில் உள்ளது)

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். நகரத்தார் திருப்பணி பெற்ற
கோயில். இராசகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய
வாயில். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரேமூலவர்
சந்நிதி. வலப்பால் அம்பாள் சந்நிதி - தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலம்.

     வெளிமண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உளது. உள்மண்டபத்தில்
நடராசசபை உள்ளது. திருமேனி மிகப்பழமையானது. சுவாமி சந்நிதியில்
உள்பக்கத்தில் உற்சவத்திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. நடராசர், சிவகாமி
சிலாரூபம் உள்ளன. மூலவர் - இலிங்கத்திருமேனி ஒருபுறம் சாய்ந்து சற்று
கூராகவுள்ளது. பிராகாரத்தில் உள்ள விநாயகர்