பொன்வீதம் மூன்று விளக்குகளுக்கு நிபந்தம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை இவைசொல்லி உல கெழுந் தேத்தக் கடறினாராவர் காற்று ளாராவர் காதலித்துறைதரு கோயில் கொடிறனார்யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டு கூத்தாடும் படிறனார்போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே. (சம்பந்தர்) கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார் கனமழு வாட்கொண்டதோர் கையார் சென்னிப் பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன்றில்லார் பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன்றில்லார் மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்தெதிரே வணங்கியேத்தப் பண்ணமரும் பாடலார் பைங்கணேற்றார் பலியேற்றார் பந்தணைநல் லூராரே. (அப்பர்) மந்திரமான ஐந்தெழுத்தினை நெஞ்சிற் சிந்தித்தனு தினஞ்செபித்தவர் நாளும் பந்தமதொழிந்து பந்தணைநல்லூர்ச் சுந்தரன் சேவடி துன்னுவர் சுகமே. (பசுபதீஸ்வரர் பதிகம்) (பட்டீச்சுரம் மௌனசுவாமிகள்) மருந்தொன்று மில்லையோ பொருந்துநோய் தீர்க்கவும் மனமதிற்க ருணையி லையோ வஞ்சனே னென்னினும் அஞ்சினேன் அஞ்சினேன் வன்பிணிக்கு ஆற்றகில்லேன் அருந்தவர்க் கிரங்கி நல்லருள் புரியும் அம்பிகை அமரர் பணிகின்ற அம்மே அன்றுவளர் காழியர் கவுணியக் கன்றினுக்(கு) அருள்ஞான அமுதம் உதவி இருந்தமிழ் வேதமுறை பாடிடக்கேட்டு நல் இன்புற்றிருந்த தாயே |