சோழநாட்டு (வடகரை)த் தலம். (1) மயிலாடுதுறை - கல்லணை - சாலையில் ‘அஞ்சார்வார்த்தலை’ என்னுமிடத்தில் வலப்பால் பிரியும் பந்தநல்லூர் - கும்பகோணம் சாலையில் சென்று, கதிராமங்கலத்தை அடைந்து, அங்கிருந்து இடப்புறமாகச் செல்லும் கும்பகோணம் பாதையில் மேலும் சென்று திருக்கோவடிக்காவல் தாண்டி ‘கோட்டூர்’ ‘கஞ்சனூர்’ என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து, வலப்புறமாகத் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் தெருக்கோடியில் கோயிலைக் காணலாம். (2) கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுள்ளது. திருவாவடுதுறைக்கு அருளில் உள்ள தலம். |