பக்கம் எண் :

340 திருமுறைத்தலங்கள்


     பலாசவனம், பராசரபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திபுரி
என்பன இதற்கு வேறுபெயர்கள்.

     பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும்; பிரம்மனுக்குத் திருமணக்
காட்சி தந்ததும்; அக்கினிக்கு உண்டானசோகை நோயைத் தீர்த்ததும்;
சந்திரனின் சாபம் நீங்கியதும்; கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி
நீங்கியதும்; கலிக்காமருக்குத் திருமணம் நடந்ததும்; மானக் கஞ்சாற நாயனார்
அவதரித்து வழிபட்ட சிறப்பினதும் ஆகிய பல்வகைப் பெருமைகளையும்
உடைய தலம். இவற்றுக்கும் மேலாக பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய
ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம். இவருக்கு இறைவன் அருள்செய்த
வரலாறு தனிப்பெருமையுடையது.

     இறைவன் - அக்னீஸ்வரர்
     இறைவி - கற்பகாம்பிகை
     தலமரம் - பலாச மரம்
     தீர்த்தம் - அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம் முதலியன.

     அப்பர் பாடல் பெற்ற தலம்.

மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத் திருக்கோயில்

ஹரதத்த சிவாசாரியார் வரலாறு வருமாறு :

    முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர்
வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக்
குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.
திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ
சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக்
காய்ச்சிய இரும்பு முக்காலிமீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று
அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். இக்காட்சியைச்
சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர்
கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும்
அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். ஹரதத்தருக்கு
உபதேசித்தருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின்
உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர்
என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.

     ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம்
படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி