பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 341


அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு
தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று
அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை
வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை
ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார்.

     இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை
நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில்
ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின்
திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு
நோக்கி ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்
கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

     கோயில் இராசகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான
கோயில். கோயிலின் பக்கத்தில் அலுவலகம் உளது. தெற்கு வாயில் வழியாக
உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிராகாரமாக வலம் வந்து மண்டபத்தை
யடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சந்நிதி,
அடுத்து அம்பாள் சந்நிதி.

    உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடப்பால்
(வௌவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூர சுப்பிரமணியர்,
மகாலட்சுமி சந்நிதிகள் உள. தலமரம் - புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ்
அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர்
திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார்
மனைவியுடன் காட்சி தருகிறார்.

    பக்தர் ஒருவர் இவ்வூரைச் சேர்ந்தவர். சுரைக்காய் விற்றுப் பிழைத்து
வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம்
ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று
அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம்
விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது
திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக்
கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு
பாதி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார்
என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.

     மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன்,
நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை
தரிசிக்கத் தக்கது. நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக)
இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்