‘மூவிலை நற்சூலம் வலனேந்தினானை மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடை யொன்றேறுவானை நால் வேதம் ஆறங்க மாயினானை ஆனிலைந்து கந்தானை அமரர் கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் காவலனைக் கஞ்சனூராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே.’ (அப்பர்) - கந்தமலர் அஞ்சனூர் செய்ததவத் தாலப் பெயர் கொண்ட கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே. (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. அக்கினீஸ்வரர் திருக்கோயில் கஞ்சனூர் & அஞ்சல் - 609 804 (வழி) துகிலி. திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம். |