பக்கம் எண் :

344 திருமுறைத்தலங்கள்


91/37. திருக்கோடிகா

திருக்கோடிகாவல்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது.

     (1) கும்பகோணம் - கதிராமங்கலம் சாலையில் சென்று இத்தலத்தை
அடையலாம்.

     (2) மயிலாடுதுறை - குத்தாலம் (வழி) கதிராமங்கலம் சாலை வழியாகவும்
வந்து இத்தலத்தையடையலாம். சாலையோரத்தில் உள்ள ஊர். ஊரில் “பெரிய
கோயில்” என்று கேட்டால் வழி சொல்லுவார்கள். ஊர்க்கோடியில் கோயில்
உள்ளது. கண்டாதித்தசோழன் மனைவியான செம்பியன்மா தேவி
இக்கோயிலைக் கற்றளியாக்கினார்.

       இறைவன் - கோடீஸ்வரர், கோடிகாநாதர்.
       இறைவி - திரிபுரசுந்தரி, வடிவாம்பிகை.