சோழநாட்டு (வடகரை)த் தலம். (1) கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. இத்தலத்திலிருந்து திருக்கோடி காவல், ஆடுதுறை முதலிய தலங்களுக்குச் செல்லலாம். கோயில் வழியாகச் செல்லும் பாதை திருப்பனந்தாள் செல்கிறது. ஊரின் தொடக்கத்தில் இடப்புறமாகப் பிரிந்துசெல்லும் (திருப்பனந்தாள்) சாலையில் சென்றால் வீதியின் கோடியிலுள்ள கோயிலை அடையலாம். இறைவன் - பிராணவரதேஸ்வரர். இறைவி - மங்கள நாயகி. தலமரம் - வெள்ளெருக்கு. தீர்த்தம் - காவிரி. |