பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 35


 “நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல்பூசனை செய்யலுற்றார்
  கையிலொன்றும் காணமில்லைக் கழலடிதொழுது உய்யினல்லால்
  ஐவர் கொண்டிங்காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேற்கு
  உய்யுமாறு அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே.”
 

  “கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்டபாணி குறைபடாமே
  ஆடிப்பாடி அழுது நெக்கங்கு அன்புடையவர்க்கின்பம் ஓரீர்
  தேடித்தேடி திரிந்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்
  ஓடிப் போகீர் பற்றுந்தாரீர் ஓணகாந்தன் தளியுளிரே.”

  “வாரிருங்குழல் நெடுங்கண் மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
  தாரிருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த
  காரிரும் பொழிற் கச்சிமூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர்போய்
  ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே.”
                                              (சுந்தரர்)

                                      - “நாற்றமலர்ப்
  பூந்தண்டளி விரித்துப் புக்கிசைக்குஞ் சீர் ஓண
  காந்தன்தளி யருட்ப்ரகாசமே.”       (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

 அ/மி. ஓணகாந்தன் திருக்கோயில்
  பஞ்சுப்பேட்டை - (பெரிய) காஞ்சிபுரம் - 631 502
  காஞ்சிபுரம் மாவட்டம்.
 

4. கச்சி அனேகதங்காவதம்

காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

     தொண்டை நாட்டுத் தலம்.

    காஞ்சிபுரத்தில் உள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இதுவும்
ஒன்றாகும்.

     அனேகதம் - யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத்
திருமேனியை நிறுவி வழிபட்ட தலம்.