பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 353


பழுதடைந்துள்ளன. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எவையுமில்லை.
கல்வெட்டில் இறைவன் பெயர் ‘ஆப்பாடி உடையார்’ என்றுள்ளது.

   “உள்ளுமாய்ப் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி
    வெள்ளமாய்க் கரையும் ஆகி விரிகதிர் ஞாயிறாகிக்
    கள்ளமாய்க் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி
    அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்தஆப் பாடியாரே.”
                                                - அப்பர்.

   “உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ! ஊழ்வினைகள்
    கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
    தென்திரு ஆப்பாடியின் தெய்வமறை நான்கினையும்
    தன்திருவாய்ப் பாடியான் தாள்.”
                                 - ஐயடிகள் காடவர்கோன்.

                                          -தினந்தாளிற்
     சூழ் திருவாய்ப் பாடியங்கு சூழ்கினு மாமென்றுலகர்
     வாழ் திருவாய்ப் பாடியின்ப வாரிதியே          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. பாலுகந்தநாதர் திருக்கோயில்
     திருவாய்ப்பாடி
     திருப்பனந்தாள் அஞ்சல் - திருவிடைமருதூர் வட்டம்
     தஞ்சை மாவட்டம் - 612 504.

தலம்-23