பக்கம் எண் :

356 திருமுறைத்தலங்கள்


    “பீரடைந்த பாலதாட்டப் பேணாது அவன்தாதை
     வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
     தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்த தென்னே
     சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே.”
                                        (சம்பந்தர்)

     ருமைத்தம் பியர்க ளானநவ வீரருடன்
         எழிலிலக் கம்வீரரும்
     எண்ணவரு தொகையிரண் டாயிரம் வெள்ளமெனும்
         ஏர்கொண்ட பூதகணமும்
     பொருதுபடை கைக்கொண்ட நூற்றெட் டெனும்பெரிய
         பூதப்ப டைத்தலைவரும்
     பூங்கமல நயனனும் நான்முகனும் முனிவரும்
         புரந்தரனும் வானோர்களுங்
     கருணை வடிவானநின் புடைசூழவே பெரிய
         காவேரி நாடு வாழ்க
     கைவேலி னால்மண்ணி நதியழைத் தேதேவர்
         கம்மியன் றான்படைத்த
     திருநகர மாம்பெரிய சேய்ஞலூர் வாழ்முருக
         செவ்வாயின் முத்தமருளே
     சிவபூசை செய்தருட் படையொன்று பெற்றவன்
         செவ்வாயின் முத்தமருளே
                       (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்)

                            -ஏழ்புவிக்குள்
     வாய்ஞ்ஞலூர் ஈதேமருவ என வானவர்சேர்
     சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே.
                                    (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
     சேங்கனூர் - திருப்பனந்தாள் அஞ்சல் - 612 504
     திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.