வாஞ்சையுறும் சீவன் குடியுறவிச்சீர் நகரொன்றே யெனுஞ்சீர்த் தேவன் குடி மகிழ்ந்த தெள்ளமுதே. அஞ்சல் முகவரி :- அ/மி. கற்கடகேஸ்வரர் திருக்கோயில் திருத்தேவன்குடி - திருவிசலூர் அஞ்சல் வேப்பத்தூர் S.O. 612 105. கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம். 97/43. திருவியலூர் திருவிசநல்லூர் / திருவிசலூர். | சோழநாட்டு (வடகரை)த் தலம். (1) திருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை யடையலாம். (2) கும்பகோணத்திலிருந்து செல்லலாம். நகரப் பேருந்து உள்ளது. மக்கள் திருவிசலூர், திருவிசநல்லூர் என்று சொல்கின்றனர். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இப்பதி “பண்டாரவாடை திருவிசலூர்” திருவிசநல்லூர் என்று வழங்கப்படுகிறது. இறைவன் - யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர். இறைவி - சாந்தநாயகி, சௌந்தரநாயகி. தீர்த்தம் - சடாயு தீர்த்தம். சம்பந்தர் பாடல் பெற்றது. பெரிய கோயில். சடாயு வழிபட்டது. நகரத்தார் திருப்பணி பெற்றது. சைவசித்தாந்தச் சாத்திர நூல்களுள் ஒன்றாகிய ‘திருவுந்தியார்’ பாடிய ‘திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்’ அவதரித்த தலம். தஞ்சை அரண்மனையின் பரிபாலனத்திற்குட்பட்ட கோயில். |