சோழர்காலக் கல்வெட்டில் இத்தலம் “வடகரை ராஜேந்திர சிம்ம சோழவள நாட்டு, மண்ணிநாட்டுப் பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர்” என்றும்; இறைவன் பெயர் “திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர்” எனவும் குறிக்கப்படுகிறது. தவிர இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டொன்று : (1) விளக் கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், (2) அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும் (3) காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றது. அவ்வாறே இராசேந்திரன் காலக் கல்வெட்டு (1) அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும் (2) அவன் மனைவியான அரசி, சுவாமிக்குத் தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக்கலசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது. “குரவம் கமழ் நறுமென்குழல் அரிவை அவள்வெருவப் பொரு வெங்கரி படவென்றதன் அரிவை உடல் அணிவோன் அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே.” (சம்பந்தர்) -ஓவின் மயலூர் மனம்போல் வயலிற் கயலூர் வியலூர் சிவானந்த வெற்பே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. யோகானந்தீஸ்வரர் திருக்கோயில் திருவிசலூர் & அஞ்சல் வழி) வேப்பத்தூர் - 612 105. கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம் |