பக்கம் எண் :

362 திருமுறைத்தலங்கள்


99/45. இன்னம்பர்

இன்னம்புர், இன்னம்பூர்

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

   
மக்கள் வழக்கில் இன்னம்பூர் என்று வழங்குகிறது. நெடுஞ்சாலைத்
துறையினரின் பெயர்ப் பலகை ‘இன்னம்புர்’ என்றே உள்ளது. கும்பகோணம் -
திருவையாறு பாதையில் புளியஞ்சேரி சென்று, அங்குச் சாலையில்
‘திருப்பிறம்பியம்’ என்று கைகாட்டி உள்ள இடத்தில், அதுகாட்டும் பாதையில்
(வலப்புறமாகச்) சென்றால் 3 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பரை
அடையலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. (இதே பாதையில் மேலும்
3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் அடையலாம்.) இக்கோயில்
சுவாமிமலையோடு இணைந்தது. ஐராவதம் வழிபட்டது. அகத்தியர் வழிபட்டு
இலக்கண உபதேசம் பெற்ற தலம்.

     இறைவன் - எழுத்தறிநாதர், தான்தோன்றீசர்
     இறைவி - சுகந்தகுந்தளாம்பிகை, நித்யகல்யாணி,
                           
(இரு அம்பாள் சந்நிதிகள்) 
     தலமரம் - பலா, சண்பகம்
     தீர்த்தம் - ஐராவத தீர்த்தம்
     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய கோயில்.
கொடிமரமில்லை ; பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடப்பால் நால்வர்
சந்நிதி. வலப்பாகத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சந்நிதி - சதுர்ப்புஜத்துடன்
நின்ற கோலம். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். வெளிச்சுற்றில்
சந்நிதிகள் எவையுமில்லை. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்
பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், நவக்கிரகம்
முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். உள் முகப்புக் கம்பத்தில் நர்த்தன
விநாயகர் காட்சி தருகிறார். உள்ளே சென்றால் வலப்பால் இரண்டாவது
அம்பாள் நித்யகல்யாணி சந்நிதி. மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன்
கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.

   
திருப்பணி தொடங்கப்பட்டு பரிவார மூர்த்தங்கள் பாலாலயம்
செய்யப்பட்டுள்ளன. திருப்பணிகள் திருச்சி, மலைக்கோட்டை