பக்கம் எண் :

364 திருமுறைத்தலங்கள்


100/46. திருப்புறம்பயம்

திருப்பிறம்பியம்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் திருப்பிறம்பியம் என்றழைக்கின்றனர். பேருந்துப் பலகையும்
அவ்வாறுதான் உள்ளது.

     கும்பகோணம் - திருவையாறு சாலையில், புளியஞ்சேரி சென்று,
அங்குச் சாலையில் திருப்பிறம்பியம் என்று வழிகாட்டிப் பலகை உள்ள
இடத்தில் அத்திசையில் சென்றால் இன்னம்புர் (இன்னம்பர்) வரும். அடுத்து
3 கி.மீ. சென்றால் திருப்புறம்பயம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப்
பேருந்து உள்ளது. 10 கி.மீ. தொலைவு.

     பிரளயத்திற்குப் புறம்பாய் இருந்தமையால் (புறம்பு - அயம்
திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. வேறு பெயர்கள் :- கல்யாண மாநகர்,
புன்னாகவனம் ஆதித் தேஸ்வரம் என்பன.

       இறைவன் - சாக்ஷிநாதேஸ்வரர், சாஷீஸ்வரர், புன்னைவனநாதர்
       இறைவி - கரும்பன்ன சொல்லி, இக்ஷு வாணி.
       தலமரம் - புன்னை
       தீர்த்தம் - பிரமதீர்த்தம்.