“மறியிலங்கு கையர் மழுவொன்றேந்தி மறைக்காட்டேன் என்றோர் மழலைபேசிச் செறியிலங்கு திண்தோள்மேல் நீறுகொண்டு திருமுண்ட மாவிட்ட திலகநெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின்சென்று நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப் பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப் புறம்பய நம்முரென்று போயினாரே.” (அப்பர்) “பதியும் சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும் நெதியிலிம் மனைவாழும் வாழ்க்கையு நினைப்பொழி மடநெஞ்சமே மதியஞ்சேர் சடைக்கங்கை யானிட மகிழுமல்லிகை செண்பகம் புதிய பூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயத் தொழப் போதுமே.” (சுந்தரர்) -முன்அம்பு மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம் ஏற்கும் புறம்பியம் வாழ்என் உயிரே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சாட்சி நாதேஸ்வரர் திருக்கோயில் திருப்பிறம்பியம் - அஞ்சல் 612 303 கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம். |