“நீலமா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி ஆலியா வருபுனல் வடகரை அடைகுரங் காடு துறையே.” (சம்பந்தர்) -உய்யும் வகைக் காத்தும் படைத்தும் கலைத்துநிற்போர் நாடொறும் ஏத்தும் குரங்காட்டின் என்னட்பே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. தயாநிதீஸ்வர் திருக்கோயில் ஆடுதுறை பெருமாள் கோயில் உள்ளிக்கடை அஞ்சல் - 614 202. (வழி) கணபதி அக்ரஹாரம். பாபநாசம் வட்டம் - தஞ்சை மாவட்டம். சோழநாட்டு (வடகரை)த் தலம். கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். இறைவன் - ஆபத்சகாயர். இறைவி - பெரியநாயகி. தலமரம் - வாழை. தீர்த்தம் - மங்கள தீர்த்தம் (பயனின்றி அழிந்துவிட்டது.) சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. பழமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளையுடையது. செடிகள் முளைத்துள்ளன. சிதலமடைந்துள்ளது. உள்கோபுரத்திற்கும் இதே கதி. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள். |