பக்கம் எண் :

374 திருமுறைத்தலங்கள்


                                              -மாத்தழைத்த
     வண் பழனத்தின் குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
     வுண் பழனத்தென்றன் உயிர்க்குயிரே.         (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பழனம் - அஞ்சல் (THIRUPPAYANAM)
     (வழி) திருவையாறு - 613 204. தஞ்சை மாவட்டம்.

105/51. திருவையாறு

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர். தஞ்சாவூருக்கு 11 கி.மீ.
தொலைவில் உள்ளது. தஞ்சை கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து
இத்தலத்திற்கு வரப் பேருந்துகள் உள்ளன. சிறப்புக்கள் பல வாய்ந்த தலம்.
அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அற்புதத் தலம்.
இவ்வற்புதம் - கயிலைக் காட்சித் திருவிழா ஆண்டு தோறும் ஆடி
அமாவாசையன்று நடைபெறுகிறது. சப்த ஸ்தான தலங்களுள் இதுவும் ஒன்று.
இந்திரன், இலக்குமி ஆகியோர் வழிபட்ட தலம். தருமையாதீனத்தின்
அருளாட்சிக்குட்பட்ட பெருங்கோயில். மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த
‘அரசர் தமிழ்க் கல்லூரி’ இத்தலத்தில்தான் உள்ளது. சுந்தரரும் சேரமானும்
வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுங்கி வழிவிடச் செய்து
காட்சி தந்தருளிய தலம்.

         “அரியலால் தேவியில்லை
           ஐயன் ஐயாறனார்க்கே”

        என்னும் திருமுறை வாக்கின்படி இங்கு அம்பாளே அரியின்
அம்சமாதலின் இத்தலத்தில் விஷ்ணு ஆலயம் இல்லை. தேவியே
மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதற்கேற்ப, அம்பாளுக்கு எதிரில் கிழக்கே
பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ‘பஞ்ச
நதக்ஷேத்திரம்’ ‘ஐயாறு’ எனப்படும். இத்தலம் நாற்புறமும் கோபுர
வாயில்களைக் கொண்டது.