“காவதனே கச்சி நெறிக் காரைக்காட் டேய்ந்து வருந் தேவனே காரைத்திரு நாதா” (சிவதல நாமக் கலிவெண்பா) - “மங்காது மெச்சி நெறிக் கார்வமேவி நின்றோர் சூழ்ந்த திருக் கச்சிநெறிக் காரைக் காட்டிறையே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. கச்சிநெறிக்காரைக்காட்டீஸ்வரர் திருக்காலீஸ்வரர் திருக்கோயில் திருக்காலிமேடு - காஞ்சிபுரம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்துப்பாதையில் பாலாற்றைத்தாண்டி ‘தூசி’ என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து கிழக்கு நோக்கி 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில்வரை செல்ல நல்லபாதையுள்ளது. வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம். மிகச் சிறிய கோயில். கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது. இறைவன் - வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர். இறைவி - இறையார் வளையம்மை. தலமரம் - இலந்தை. தீர்த்தம் - காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு). சிவலிங்கத் திருமேனி சிறியது. சிறிய கருவறை. மேற்கு நோக்கிய சந்நிதி. சம்பந்தர் பாடல் பெற்றது. இக்கோயில் உள்ள ஊர் |