பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 391


தலபுராணப் பாடல் :

   “சீர்கொண்ட சுகவடிவாய் அருமறையின் உட்பொருளாய்த்
                                    தெளிவாய் மேலாய்ப்
    பேர்கொண்ட ஐந்தொழிலும் இயற்றி இயற்றாத தனிப் பிரமமான
    கார்கொண்ட மணிமிடற்றெம் பெருமானை யோக வனக்
                                           கடவுளானை
    ஏர்கொண்ட வடமூலநாதனை மெய் யன்பினால் இறைஞ்சல்
                                           செய்வாம்.”

   “அளவில் பெரும்புகழ்ச்சேர் மெய்ஞ் ஞானவிழியால் நோக்கி
                                         அன்பென்றோதும்
    தளர்வில் மணிக்கரத்தால் அஞ்சலித்து அறிவாஞ் சிரத்தினால்
                                         தாழ்ந்து மேன்மை
    விளைவு நெறிப் பத்தியெனு மணிவாயற் புகழ்ந்துருகி
                                        விரும்பியென்றும்
    தவள நகைக் களபமுலை அருந்தவநாயகி கமலச்
                                        சரண்புக்கேமால்.”

                                       -துன்னுகின்ற
    நாய்க்கு கடையேன் நவைதீர நற்கருணை
    வாய்க்கும் பழுவூர் மரகதமே.                 (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. வடமூலேஸ்வரர் திருக்கோயில்
   
கீழப்பழுவூர் & அஞ்சல் (KILAPALUVUR) 621 707
     
அரியலூர் வட்டம் - பெரம்பலூர் மாவட்டம்.

110/56. திருக்கானூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

   
 கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது. மக்கள்
குடியிருப்பு ஏதுமில்லை. கோயிலைச் சுற்றி மரங்கள் அடர்ந்து பசுமையான
சூழல் உள்ளது. கோயில் இருப்பதைத் தவிர இங்கு எவ்வித வசதியுமில்லை.
இத்தலத்திற்குச் செல்வோர் காலையில் சூரிய வெப்பம் ஏறுவதற்கு முன்பும்
அல்லது மாலையில் சூரிய வெப்பம் தணிந்த பின்பும் தான் வசதிப்படிச்
செல்லவேண்டும். காரணம் சிறிது