பக்கம் எண் :

392 திருமுறைத்தலங்கள்


தூரம் மணலில் நடக்கவேண்டும். இருட்டி விட்டால் இங்குச் சென்று
வரமுடியாது.

    (1) தனிப் பேருந்தில் திருக்கூட்டமாகச் செல்வோர் திருக்கண்டியூரி
லிருந்து, சிவாலயத்திற்கு நேர் எதிரில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச்
சாலையில் சென்று திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, அங்கிருந்து காவிரிப்
பாலத்தைத் தாண்டி, வலப்புறமாகப் பிரிந்து செல்லும் கும்பகோணம்,
மயிலாடுதுறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப்
பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில் திரும்பிச் சென்று, விஷ்ணம்
பேட்டையை அடைந்து, பேருந்தை நிறுத்தி விட்டு, திருக்கானூர் கோயிலுக்குச்
செல்லும் வழியைக் கேட்டறிந்து அச்சாலையில் (மண்சாலை) நடந்து செல்ல
வேண்டும். வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள்
குடியிருக்கும் பகுதிவரும். அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்து
மேட்டைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி வலப்புறமாகத் திரும்பிச்
சென்றால் சிறிது தூரத்தில் கோயிலை அடையலாம். (Van Car களில்
வருவோர் கூட மேற்சொல்லியவாறே நிறுத்திவிட்டு நடந்து வருவதே நல்லது.)

    (2) தனியாக வருவோர் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து வாடகை
சைக்கிள் எடுத்துக் கொண்டு மேற்சொல்லியவாறு அவ்வழியே வந்து,
மணற்பகுதிக்கு முன்புள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் சைக்கிளை விட்டு
விட்டு நடந்து சென்று கோயிலை அடையலாம். (இக் கோயில் குருக்கள்
விஷ்ணம்பேட்டையில் உள்ளார். அவரையழைத்துக் கொண்டுதான்,
தரிசனத்திற்குச் செல்லவேண்டும்) அக்கினி வழிபட்ட தலம்.

     1924ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது.
அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக்கண்டு,
திரு. N. சுப்பிரமணிய ஐயர் என்பவர் முயன்று தோண்டிப் பார்த்தபோது
கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர்
என்று பெயராயிற்று.

    இறைவன் - செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
    இறைவி - சிவலோக நாயகி 
    தீர்த்தம் - கொள்ளிடம்.

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.