பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 399


     பெயர் “திருப்பாற்றுறை மகாதேவர்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின்
மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம்.

  
 “காரார் கொன்றை கலந்த முடியினர்
     சீரார் சிந்தை செலச் செய்தார்
     பாரார் நாளும் பரவிய பாற்றுரை
     ஆரார் ஆதி முதுல்வரே.”           (சம்பந்தர்)

                                          -ஏந்தறிவாம்
    நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வெய்து திருப்
    பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே.             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. ஆதிமூலநாதர் திருக்கோயில்
    திருப்பாற்றுறை & அஞ்சல் (வழி) திருவானைக்கா
    திருச்சி வட்டம் & மாவட்டம் - 620 005.