பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 409


117/63. திருஈங்கோய்மலை

திருவிங்கநாதமலை

     சோழ நாட்டுத் தலங்களுள் காவிரியின் வடகரையில் உள்ள திருமுறைத்
தலங்களுள் இது கடைசித்தலம். இதற்கு நேர் எதிரில், தென்கரையில் உள்ள
முதல் தலமான வாட்போக்கி உள்ளது. தற்போது மக்கள் வழக்கில்
திருவிங்கநாதமலை என்று வழங்கப்படுகிறது. திருச்சி-சேலம் பெருவழிப்
பாதையில் முசிறிக்கு அண்மையில் இத்தலம் உள்ளது. கடம்பந்துறை
(குளித்தலை) யிலிருந்து சென்று அகண்ட காவிரியைக் கடந்து அக்கரையில்
உள்ள இத்தலத்தை அடையலாம். திருச்சி-நாமக்கல்-சேலம் பேருந்தில்
செல்லலாம். கோயில் குன்றின் மேல் உள்ளது. அம்பிகை வழிபட்டதால்
இதற்குச் சிவசக்திமலை என்று பெயர் வழங்குகின்றது. அகத்தியர், ஈவடிவில்
சென்று சுவாமியைத் தரிசித்த தலம்.

     இறைவன் - மரகதாசலேசுவரர், மரகத நாதர்.
     இறைவி - மரகதவல்லி.

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

     சிவலிங்கம் மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக
இருக்கிறது. நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது ‘ஈங்கோய் எழுபது’
என்ற நூலைப் பாடியுள்ளார்.