பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 411


அஞ்சல் முகவரி :-

    அ/மி. மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
    திருவிங்க நாதமலை (திருஈங்கோய்மலை)
    (வழி) மணமேடு - தொட்டியம் வட்டம்
    திருச்சி மாவட்டம். 621 209

118./1. திருவாட்போக்கி

ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை

     சோழநாட்டுத் தென்கரைத் தலங்களுள் முதலாவது தலமாகும்.
குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
இதற்கு நேர் எதிராக, ஈங்கோய்மலை (வடகரைத் தலம்) உள்ளது. தற்போது
மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. இதற்குரிய வேறு
பெயர்கள் இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன.

     சுவாமி - ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்க ஈசர்,
                        
முடித்தழும்பர்.

     
அம்பாள் - சுரும்பார்குழலி

     
அப்பர் பாடல் பெற்ற தலம்.

     மேற்கு நோக்கிய சந்நிதி. இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன்
முதலியோர் வழிபட்ட தலம்.

     அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள்
பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இறைவனுக்கு
மத்தியான சுந்தரர் என்றும் பெயர். மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய
மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால்
நிரப்பச் சொன்னார். அது எப்படியும் நிரம்பாமல் இருக்கக் கண்டு, கோபங்
கொண்ட அரசன், உடைவாளை ஒச்ச, இறைவன் மாணிக்கத்தைத் தந்து
அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து
முக்திபெற்றான் என்பது வரலாறு. இதனால் சுவாமிக்கு முடித்தழும்பர்
என்றும் பெயர். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட
வடுவைக் காணலாம். மூர்த்தி - சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக
உயரத்தில் உள்ளது.