பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 417


     ஐப்பசி துலா நீராடலும், அகண்ட காவிரியில் சென்று சுவாமி தீர்த்தம்
கொடுப்பதும் விசேஷமானது. இத்தலத்தின் கீழ் எல்லையில் சுவாமி
சித்பவானந்தரின் இராமகிருஷ்ண தபோவனமும், மேல் எல்லையில்
இராமகிருஷ்ண குடிலும் பள்ளிகளும் உள்ளன.

  
 “விரவி நீறுமெய் பூசுவர் மேனிமேல்
     இரவினின்றெரி யாடுவர்
     பரவினாரவர் வேதம் பராய்த் துறை
     அரவமார்த்த அடிகளே.”      (சம்பந்தர்)

    “தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
     இண்டை கட்டி இணையடி ஏத்தியும்
     பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
     கண்டு கொண்டடியேனுய்ந்து போவனே.”   (அப்பர்)

    “பராய்த் துறை மேவிய பரனே போற்றி”  (திருவாசகம்)

                                              -“மல்லலொடு
     வாழும் பராய்த் துறைவான் மன்னவரு மன்னவருஞ்
     சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே.”   (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்
    திருப்பராய்த்துறை & அஞ்சல் - 639 115
    கரூர் மாவட்டம்.

தலம் - 27