“தாயுமாய் எனக்கேதலை கண்ணுமாய் யேய னேனையும் ஆண்ட பெருந்தகை தேய நாதன் சிராப் பள்ளி மேவிய நாயனார் என நம்வினை நாசமே.” (அப்பர்) “சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி” (திருவாசகம்) “கழிந்தது நென்னற்று கட்டுவிட்டு நாறி ஒழிந்தது உடல் இராவண்ணம் - அழிந்தது இராமல் ஐயா ! கொண்டு போ என்னா முன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.” (ஐயடிகள் காடவர்கோன்) - மற்செய் அராப்பள்ளிமேவுமவனின்று வாழ்த்துஞ் சிராப்பள்ளி ஞானத் தெளிவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. தாயுமானவசுவாமி திருக்கோயில் மலைக்கோட்டை திருச்சி - 620 002. 124/7. திருஎறும்பியூர் திருவெறும்பூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம்.
மக்கள் வழக்கில் ‘திருவெறும்பூர்’ என்றும் திருவரம்பூர் என்றும் வழங்குகின்றது. திருச்சியை அடுத்த இருப்புப்பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் உள்ளன. தொல் பொருளாய்வுத்துறையின் பாதுகாப்பில் இருந்து வரும் இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு, பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம், குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. |