பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 429


    “பன்னிய செந்தமிழறியேன் கவியேன் மாட்டேன்
        எண்ணோடு பண்நிறைந்த கலைகளாய
     தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியிலேனைத்
        தன் திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
     அன்னையையும் அத்தனையையும் போல அன்பாய்
        அடைந் தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக்கொண்ட
     தென்எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
         செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே."  (அப்பர்)

    “தனச்சிலம்பா மணியேட்டிற்றன் மருப்பால்
          வரைந்தருள் காசன னன்வே
     கினச்சிலம்பா னிகரகடுவிழி வதன
          மாதர்படைத் தலைவனாம்
     தனச்சிலம்பா வணமுறச் செய்கண்ணுதலோன்
          தருமூத்த தனையனேர
     தனச்சிலம்பாருங் கமலமணிப் பதத்தை
         அனுதினமும் வணங்கி வாழ்வோம்”
                                  (தலபுராணம் - விநா.துதி)

  “இறும்பான சிறகரரிந்து லகுயிரைக் காத்த இருங்குலிசக் கையான்
  எறும்பான அஃறிணையின் உருக்கொடுநம் இறைவனை இகவா
                                             அன்பான்
  நறும் பாதவஞ்செறியும் எறும்பீசந்தனை யெய்தி நண்ணிப்பூசை
  உறும் பாசமகற்றிடச் செய்எறும்பீசன் அடிமலரை உன்னி
                                              வாழ்வாம்.”
                                   (தலபுராணம் - சுவாமி துதி)

  “மகந்தனையே பலபுரிந்த மகவானும் அமலனடிமருவுமின்ப
  சுகந்தனை யெய்திட எறும்பின் உருக்கொ டெறும் பீசத்தே சூழ்ந்து
                                                  போற்ற
  உகந்தனையான் தனக்குதவும் இறைவனிடப் பாகத்தே ஒருவ
                                                தோங்கும்
  சுகந்தநறுங் குழலமுதை அன்பின் மொழிந்தென் பிறவித்
                                            துரிசுதீர்வாம்.”
                                  (தலபுராணம் - அம்பாள்துதி)

    “நின்றழல் மெய்யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
     நன்றெறும்பி யூரிலிங்கு நன்னெறியே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    
 அ/மி. எறும்பீஸ்வரர் திருக்கோயில்
     திருவெறும்பூர் & அஞ்சல் - 620 013.
    
திருச்சி.