பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 435


     “மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
      நாட்டுப் பொய் யெலாம் பேசிடும் நாணிலீர்
      கூட்டை விட் டுயிர் போவதன் முன்னமே
      காட்டுப் பள்ளி யுளான் கழல் சேர்மினே.”        (அப்பர்)

                                          - எண்ணார்
     தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டார் சூழுந்
     திருக்காட்டுப் பள்ளியில் வாழ் தேவே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

   
அ/மி. அக்னீசுவரர் திருக்கோயில்
    திருக்காட்டுப்பள்ளி & அஞ்சல் 613 104
    தஞ்சை மாவட்டம்.

127/10. திரு ஆலம்பொழில்

திருவாலம் பொழில்,
திருவாம்பொழில்

    சோழநாட்டு (தென்கரை)த்தலம்.

    (1) திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில்
உள்ள தலம். (மேலத்திருப்பூந்துருத்தியை அடுத்துள்ளது.) மக்கள் வழக்கில்
திருவாலம் பொழில், திருவாம்பொழில் என வழங்குகிறது. கண்டியூரிலிருந்து
நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

    (2) திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும்
பேருந்தில் வந்தால் இத் தலத்திலேயே இறங்கலாம். காசிபர், அஷ்ட
வசுக்கள் வழிபட்டது.

     
இறைவன் - ஆத்ம நாதேஸ்வரர்
     
இறைவி - ஞானாம்பிகை.
     
தலமரம் - ஆல். (தற்போதில்லை)

     
அப்பர் பாடல் பெற்றது.