| சோழநாட்டு (தென்கரை)த் தலம். தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9. கி.மீ. தொலைவு. திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவு. பேருந்து வசதி உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றாகும். “சாதாதாப” முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம்’ என்றும் பெயர். இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. பிரமகத்தி தோலும் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது. சூரியன் வழிபட்டதலம் இது. ஆதலின், மாசிமாதம் 13, 14, 15 ஆம் நாள்களில் மாலையில் 5 - 45 மணிமுதல் 6, 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகின்றது. அருணகிரி நாதர் பாடல் பெற்றது. இறைவன் - பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர். இறைவி - மங்கள நாயகி தலமரம் - வில்வம் தீர்த்தம் - நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம், குடமுருட்டியாறு முதலியன. சம்பந்தர், அப்பர் பாடிய சிறப்புடைய தலம். பெரிய ஊர். மேற்கு நோக்கி கோயில். ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சிதருகின்றது. கவசமிட்ட கொடிமரம் - நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகின்றார். இடப்பால் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து |