பக்கம் எண் :

44 திருமுறைத்தலங்கள்


கல்வெட்டுக்கள் உள. கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்ட செய்திகள் இவற்றில்
குறிக்கப்படுகின்றன.

 “விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்
 மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடு பொழில் மாகறல் உளான்
 கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணிசெஞ்சடையினான்
 செங்கண் விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.”

 “கடை கொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
 அடையும் வகையாற் பரவிஅரனை அடிகூடு(ம்) சம்பந்தன் உரையால்
 மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலு ளான் அடியையே
 உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
                                            ஒல்குமுடனே.”
                                             (சம்பந்தர்)

                  பொய்யா விநாயகர் துதி

  வெய்யாக் கதிரவன்முன் இருள்போல வினையகற்றும்
  கையானே யான்தொழ முன்நின்று காத்தருள் கற்பகமே
  செய்யாற்றின் வடபால் இருக்கின்ற செங்கண் மால்மருகா
  பொய்யா விநாயகனே திருமாகறல் புண்ணியனே
                                               (தனிப்பாடல்)
                                    -“தோயுமன
  யோகறலிலாத் தவத்தோருன்ன விளங்குதிரு
  மாகறலில் அன்பர் அபிமானமே”
                                    (அருட்பா)


அஞ்சல் முகவரி :-


  அ/மி. மாகறலீஸ்வரர் திருக்கோயில்
  மாகறல் கிராமம் & அஞ்சல் - 631 603. (வழி) காஞ்சிபுரம்.
  உத்திரமேரூர் வட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.