தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்துக் கட்டப்படுள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் ஏழூர் திருவிழா நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தில் பதின்மூன்று நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. கல்வெட்டில், இப்பெருமான் பெயர், ‘திருவீரட்டானத்து மகாதேவர்’, ‘திருக்கண்டியூர் உடைய மகாதேவர்’ எனக் குறிக்கப் பெறுகின்றது. “அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன் அரன் செய்கையைப் படியெலாந் தொழு தேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான் முடிவுமாய் முதலாயிவ் வையமுழுதுமாய் அழகாயதோர் பொடியதார் திருமார்பினிற்புரி நூலும் பூண்டெழு பொற்பதே.” (சம்பந்தர்) “வானவர் தானவர் வைகன் மலர் கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால் பிரமன்னறியாத தகைமையினான் ஆனவனாதி புராணன் அன்றோடியப் பன்றி யெய்த கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே" (அப்பர்) -“காந்தருவத் தண்டியூர் போற்றுந் தகைகாசிக்கட் செய்து கண்டியூர் வாழும் களைகண்ணே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பிரமசிரக் கண்டீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டியூர் - அஞ்சல் 613 202 (வழி) திருவையாறு - தஞ்சை மாவட்டம். |