130/13. திருச்சோற்றுத்துறை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருவையாற்றிலிருந்து செல்லலாம். பேருந்து வசதிகள் உள்ளன. குடமுருட்டியாற்றின் கரையிலுள்ள தலம். திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானத்தலங்களுள் ஒன்று. வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர இறைவன் உணவு வழங்குபவன். எனவே சோற்றுத்துறை என்று பெயர் பெற்றது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.) ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது. இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர் வழிபட்டது. ஊர் பெரியது. |