பக்கம் எண் :

444 திருமுறைத்தலங்கள்


     “பண்டைவினைகள் பறியநின்ற
     அண்டமுதல்வன் அமலன் இடமாம்
     இண்டைகொண்டு அன்புஇடையறாத
     தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே."          (சுந்தரர்)

                                         - கொண்டியல்பின்
    வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழுஞ்
    சோற்றுத் துறையுட் சுகவளமே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

   
அ/மி. சோற்றுத்துறைநாதர் திருக்கோயில்
    திருச்சோற்றுத்துறை - அஞ்சல்
    (வழி) கண்டியூர் - S.O. 613 202
    திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம்.

131/14. திருவேதிகுடி

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச்சாலையில் உள்ள தலம்.
திருக்கண்டியூருக்கு மிகவும் அருகில் (1 கி.மீ) உள்ளது.

    வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்ற பெயர்
பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ‘விழுதிகுடி’ என்பது மருவி
‘வேதிகுடி’ ஆயிற்று என்பர் ஒருசாரார். திருவையாற்றை மையமாகக் கொண்ட
சப்தஸ்தானங்களுள் இத்தலமும் ஒன்று.

    இறைவன் - வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்
    
இறைவி - மங்கையர்க்கரசி
    தலமரம் - வில்வம்
    தீர்த்தம் - வேததீர்த்தம். (கோயிலின் எதிரில் உள்ளது.)
    தலவிநாயகர்- வேத விநாயகர்

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.