பக்கம் எண் :

454 திருமுறைத்தலங்கள்


உள்ளது. தஞ்சையிலிருந்து 20 கி.மீ. குடந்தையிலிருந்து 20 கி.மீ. காவிரியில்
கிளையாகிய வெட்டாற்றின் கரையிலுள்ளது. ஊர்த்துவ மகரிஷியின் சாபத்தால்
நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன்
மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர்
பெற்றது.

     வேறுபெயர்கள் :- (1) முல்லைவனம் (2) மாதவிவனம் (3) கர்ப்பபுரி
என்பன. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து
வழிப்பட்டு மகப்பேறு அடைகின்றனர். காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச
ஆரண்யங்களுள் இதுவுமொன்று. அவை :-

      (1) கருகாவூர் - முல்லைவனம்

      (2) அவளிவணல்லூர் - பாதிரிவனம்

     
(3) அரதைப்பெரும்பாழி - வன்னிவனம்

      (4) இரும்பூளை - பூளைவனம்

      (5) கொள்ளம்புதூர் - வில்வவனம்

     இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல்,
மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில்
உள்ளது. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார
சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்
தலச்சிறப்பு இடம் பெற்றுள்ளது. பிரமன், கௌதமர் சந்திரன் வழிபட்டது.

    இறைவன் - கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்

    இறைவி - கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
    தலமரம் - முல்லை
    தீர்த்தம் - க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் முதலியன.
    தலவிநாயகர்- கற்பகவிநாயகர்

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

    இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப
வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர்.
கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள்
விளங்குகிறாள். ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. எதிரில்
‘பாற்குளம்’ - க்ஷீரகுண்டம் உள்ளது.