“மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட ஆசையாரவரு ணல்கிய செல்வத்தர் காய்சினத்த விடையார் கருகாவூர்எம் ஈசர்வண்ணம் எரியும் எரிவண்ணமே.” (சம்பந்தர்) “மூலனா(ம்) மூர்த்தியா(ம்) முன்னே தானா(ம்) மூவாத மேனி முக்கண்ணினானாம் சீலனாஞ் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க் கோர் சோதிதானாம் மாலனா(ம்) மங்கையோர் பங்கனாகு மன்றாடியாம் வானோர் தங்கட்கெல்லாம் காலனாங் காலனைக் காய்ந்தானாகுங் கண்ணாங் கருகாவூர் எந்தைதானே.” (அப்பர்) -மிக்க அருகாவூர் சூழ்ந்தழகு பெறவோங்குங் கருகாவூர் இன்பக் கதியே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. கர்ப்பபுரீஸ்வரர் திருக்கோயில் (முல்லைவன நாதர் கோயில்) திருக்கருக்காவூர் அஞ்சல் - 614 302 தஞ்சை RMS - பாபநாசம் வட்டம் - தஞ்சை மாவட்டம் தொலைபேசி : 04374 - 73423. சோழநாட்டு (தென்கரை)த் தலம். கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். குடமுருட்டியாற்றின் கரையில் உள்ளது. கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திலுள்ள நூற்றெட்டுச் சிவலிங்கக் கோயிலோடு இணைக்கப்பெற்ற கோயில். |