பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 459


ஆவுடையாரோடு சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. திரு நல்லூர்,
திருக்கருகாவூர், திருச்சக்கரப்பள்ளி முதலிய தலங்கள் அண்மையிலுள்ளன.

    
“உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
      நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
      இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
      கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே.”     (அப்பர்)

    “அந்தரத்து இழிந்து வந்து அழகமர் பாலையுள்
     சுந்தரத் தன்மையொடு துதைந்திருந்து அருளியும்”
                               (திருவாசகம் - கீர்த்.திரு)

                                         - “முருகார்ந்த
    சோலைத்துறையிற் சுகஞ்சிவ நூல் வாசிக்கும்
    பாலைத்துறையிற் பரிமளமே.”      (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

   
அ/மி. பாலைவனேஸ்வரர் திருக்கோயில்
    திருப்பாலைத்துறை
    பாபநாசம் அஞ்சல் & வட்டம்
    தஞ்சை மாவட்டம் - 614 205.

137/20. திருநல்லூர்

    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான்
சாலையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். கோச்செங்கட்
சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். திருநாவுக்கரசு நாயனாருக்குத்
திருவடி சூட்டியதும், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதுமாகிய அற்புதத்
தலம்.

    ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர்
என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன்