பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 463


     “நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரில்
     மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில்
     உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம்
     சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.”
                                              (பெ. புரா)

                                        - சீலத்தர்
    சொல்லூரடியப்பர் தூய முடி மேல்வைத்த
    நல்லூர் அமர்ந்த நடுநாயகமே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
    திருநல்லூர் கிராமம் - அஞ்சல்
    (வழி) சுந்தரப்பெருமாள் கோயில்
    வலங்கைமான் வட்டம்
    திருவாரூர் மாவட்டம். 614 208.

138/21. ஆவூர்ப்பசுபதீச்சுரம்

ஆவூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     
ஊர் - ஆவூர். கோயில் - பசுபதீச்சுரம்.

     (1) கும்பகோணம் - மன்னார்குடிச்சாலையில் வலங்கைமான் வந்து
அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை யடையலாம்.

     (2) கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.

     கோச் செங்கட் சோழன் திருப்பணி - மாடக்கோயில். வசிட்டரால் சாபம்
பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச்
சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ+வந்த+குடி=
கோவந்தகுடி ஆயிற்று.)

     கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும்
சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு