பக்கம் எண் :

464 திருமுறைத்தலங்கள்


பெயர்கள். கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால்
கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது
ஆவூரிலும் தங்கியதாகப் புராண வரலாறு கூறுகிறது.

    இறைவன் - பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்.
    இறைவி - (1) மங்களாம்பிகை (குளத்திலிருந்து எடுத்துப்
                              
பிரதிஷ்டை செய்யப்பட்டது.)

             (2) பங்கஜவல்லி (இதுவே பழைமையானது. தேவாரத்தில்
‘பங்கயமங்கை விரும்பும் ஆவூர்’ என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு
மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

    தலமரம் - அரசு

    
தீர்த்தம் - பிரமதீர்த்தம், காமதேனு தீர்த்தம். (காமதேனு தீர்த்தம்
                      
வழக்கில் தேனுதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

      சம்பந்தர் பாடல் பெற்றது.

    பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள்,
வசிட்டர் ஆகியோர் வழிபட்டது. சங்கப் புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர்
மூலங்கிழார் முதலிய சான்றோர்களைத் தந்த ஊர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில்
இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. கல்வெட்டுச்
செய்தியில் “நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச்
சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார்” என்று இறைவனின் பெயர் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
அவர்களின் பொன்விழாத் திட்டத்தின் கீழ் இக்கோயிலில் திருப்பணிகள்
செய்யப்பட்டுள்ளன.

    புண்ணியர் பூதியர் பூதநாதர்
        புடைபடுவார் தம் மனத்தார் திங்கட்
    கண்ணிய ரென்றென்று காதலாளர்
        கை தொழுதேத்த இருந்த ஊராம்
    விண்ணுயர் மாளிகை மாடவீதி
        விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்
    பண்ணியல் பாடலறாத ஆவூர்ப்
        பசுபதியீச்சரம் பாடு நாவே”              (சம்பந்தர்)