சிவக்கொழுந்தீசர் தவநெறியே பரப்புமுயர் நாயன்மார் தமைப்புரந்து, தாவில் தீமை அவநெறியே கிடப்போர்க்கும் அருளுமுயர் பெருங்கருணை அமைத்து வையப் பவநெறியே பிடித்தொழுகும் மும்மலத்தோர் தமக்குமருட் பாங்களிக்கும் சிவநெறியே சிவக்கொழுந்தாம் செம்பொருளே சேவடிகள் சிரங்கொள் வோமே. பெரிய நாயகி திருஞானங் குழைந்தருளின் சேய்க்கருளும் பெருங்கருணைத் திருக்கை போற்றி வருஞானம் பலபொழிந்து வளர்ஞானக் கொழிக்கும்கை வண்மை போற்றி பெருஞானம் பிறங்குமருட் சேவடியாம் கமலப்பூப் பிரசம் போற்றி மருஞானம் தருஞானப் பெயரிநா யகியம்மை மலர்த்தாள் போற்றி. (தலபுராணம்) -“ஓவாது சித்த முற்றயோகஞ் செழும் பொழிலிற் பூசைசெயுஞ் சத்தி முற்ற மேவுஞ் சதாசிவமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்திமுற்றம் பட்டீஸ்வரம் அஞ்சல் - 612 703 கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம். |