பக்கம் எண் :

470 திருமுறைத்தலங்கள்


ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தர் பெற்ற திருவிழா
நடைபெறுகிறது.

    தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. இது தமிழில் உரைநடையில்
பட்டீஸ்வரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்குத் தலபுராணம் பாடத்
தொடங்கினார் என்றும் அது முற்றுப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

   
“பாடல் மறைசூடல் மதிபல் வளையொர்
         பாகமதில் மூன்றொர் கணையால்
    கூடஎரியூட்டி எழில்காட்டி நிழல்
         கூட்டு பொழில்சூழ் பழைசையுள்
    மாடமழபாடி யுறை பட்டிசர
         மேய கடிகட்டர வினார்
    வேடநிலை கொண்டவரை
         வீடுநெறி காட்டிவினை நீடுமவரே.”     (சம்பந்தர்)

    (இப்பாட்டிலிருந்து இத்தலத்திற்குப் பண்டைநாளில் மழபாடி என்ற
பெயர் இருந்ததாகத் தெரிகின்றது.)

                                      
  -“பத்தியுற்றோர்
    முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
    பட்டீச் சுரத்தெம் பராபரமே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பட்டீஸ்வரர் திருக்கோயில்
    பட்டீச்சுரம் - அஞ்சல் - 612 703.
    கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.