பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 475


    “என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
     முன்ன(ம்) நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
     மன்னு காவிரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
     பன்னியாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே”
                                              (சம்பந்தர்)

    “நறைகொள் பூம்புனல் கொண்டு எழுமாணிக்காய்க்
    குறைவிலா கொடுங்கூற்று உதைத் திட்டவன்
    மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
    இறைவனை இனிஎன்றுகொல் காண்பதே.”      (அப்பர்)

             க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்

    மந்தர மெனுங்கிரியை மத்தாக நிறுவியே
         வாசுகியை நாணதாக்கி
    மாலயனொ டிந்திராதி யமரெல் லாம்கூடி
         வளர்பயோ ததிகடையும்நாள்
    எந்தையைங் கரனைமுன் வணங்காம லதுசெய்ய
         இயம்புமலை கீழிழுப்ப
    இந்திராதி யோரறிந்து ஐங்கர விநாயகன்
         இணையடிகள் பூசைசெய்ய
    அந்தமந் தரகிரி அழன்றமுதம் உதவவே
        அன்புடன் பின்பவரெலாம்
    அமுதமபி டேகிக்க அமுதநிறம் ஆதலால்
        அருள்வெள்ளை வாரணமெனும்
    தந்திமுக வற்கிளவல் திருவலஞ் சுழிமுருக
        சப்பாணி கொட்டி யருளே
    சந்திரசே கரனான அந்திவன் ணன்மதலை
        சப்பாணி கொட்டியருளே. (சிதம்பர முனிவர்)

                                            -சேர்ந்த
     “மலஞ்சுழிகின்ற மனத்தார்க் கரிதாம்
      வலஞ்சுழி வாழ் பொன் மலையே”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. வலஞ்சுழிநாதர் திருக்கோயில்
     வலஞ்சுழி - சுவாமிமலை அஞ்சல் - 612 302.
     கும்பகோணம் வட்டம்
     தஞ்சை மாவட்டம்.