பக்கம் எண் :

48 திருமுறைத்தலங்கள்


திருவோத்தூர்த் திருப்புகழ்

தவர்வாள் தோமர சூலம் தரியாக் காதிய சூருந்
     தணியாச் சாகர மேழும் - கிரியேழும்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்
     தரிகூத் தாடிய மாவுந் - தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானும் அரநாட்டாளொடு தேனும்
     துணையாத் தாழ்வற வாழும் - பெரியோனே
துணையாய்க் காவல்செய்வாயென் றுணராப்பாவிகள்பாலும்
     தொலையாப் பாடலை யானும் - புகழ்வேனோ

பவமாய்த் தானது வாகும் பனைகாய்த் தேமணம் நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் - படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
     பறிகோப் பாளிகள் யாரும் - கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறும் திருவாக் காலொளி சேர்வெண்
     திருநீற் றாலம ராடும் - இறையோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசும்
     திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.
                                          - ஓகையிலா

“வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு
 வோத்தூரில் வேதாந்த உண்மையே.”
                                          - (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
     அ/மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
     திருவத்திபுரம் - 604 407 செய்யாறு வட்டம்.
     திருவண்ணாமலை மாவட்டம்.