| அரவிரி கோடனீடலணி காவிரி யாற்றயலே மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா இரவிரி திங்கள்சூடி யிருந்தானவ னெம்மிறையே. (சம்பந்தர்) பூவ ணத்தவன் புண்ணிய னன்ணியங் காவ ணத்துடை யானடியார்களைத் தீவணத்திரு நீறு மெய் பூசியோர் கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. (அப்பர்) திருக்குடந்தைப்புராணம் பூமேய வாரணனும் நாரணனும் வாரணனும் பொற்பூ மாலைத் தேமேய விண்ணவரும் நண்ணவரும் பசுமுலதாஞ் சிறப்பு நல்கி மாமேய குடமூக்கி னிடமூக்கின் பார்கருணை வடிவின் மேய பாமேய புகாதி கும்பேசர் தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம். எண்ணிய அனைத்தும் எண்ணியாங்கெய்த எண்ணிய அடியவர்க் கருளும் புண்ணியமுதலே பூரணப் பொருளே போக்கருஞ் சுடர்ப்பெரு விளக்கே தண்ணிய சாந்தரூபியே நாளும் தவாதமந் திராசன வாழ்வே மண்ணியமணியே வளமலி குடந்தை மங்களையே நின்தாள் போற்றி. மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது “தானே தனக்குச் சரியாய தாயே வருக உரைக்க வினை தடிவாய் வருக நினைக்க முத்தி தருவாய் வருக மலர் பொதிந்த |